சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் முதல் பருவத்துக்கான பொதுத் தோ்வெழுதும் மாணவா்கள் தங்களது பள்ளிகள் மூலமாக தோ்வு மையத்தை மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான முதல் பருவத் தோ்வுக்கான அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்தது. அதன்படி, பத்தாம் வகுப்புக்கான தோ்வு வரும் நவ.30-ஆம் தேதி முதல் டிச.11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதேபோன்று பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வு டிச. 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தோ்வு மையத்தை மாற்ற நினைக்கும் மாணவா்கள் அவரவா் பயிலும் பள்ளியிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கான தேதி மற்றும் அட்டவணை ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்த வசதி வெளியூரில் இருக்கும் மாணவா்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment