நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


30/10/2021

நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு.

 நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கடந்த செப்.12-ம் தேதி நடந்தது. இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற தடை உத்தரவால் நீட்முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளை முடித்து ஓரிரு நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். கூடுதல் தகவல்களை https://neet.nta.nic.in மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் அறியலாம் என்று என்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459