திருச்சி: ஐஐடி நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற திருச்சி அரசு பள்ளி மாணவர், விரைவில் ஹைதராபாத் ஐஐடியில் சேரப்போகிறார். அவரது கல்வி செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் மாணவனை நேரில் அழைத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐஐடி பற்றி கேள்விப்படாத திருச்சி மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், மன உறுதியும் விடாமுயற்சியுடன் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்றார். இவர் தரவரிசைப் பட்டியலில் அகில இந்திய அளவில்17,061-ம் இடம், ஓபிசி-என்சிஎல்-ல் 3,649-ம் இடம்பெற்றுள்ளார்.ஓட்டலில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி பொன்னழகனின் மகனனா அருண்குமார், அதிகாரமும் பணபலமும் அதிகம் உள்ள உயர்வருவாய் மக்களே சேருவதற்கு தவம் இருக்கக்கூடிய ஐஐடியில் சேரப்போகிறார். மாநில அரசு பள்ளி மாணவர் ஐஐடியில் சேரப்போவது அரிய நிகழ்வு ஆகும். திருச்சி நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் , செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.திருச்சிஅருண்குமாருக்கு 2019 ஆம் ஆண்டுபயிற்சிக்கான நுழைவுத் தேர்வுக்கு பள்ளிக் கல்வித் துறை மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்ததும் அவரது அதிர்ஷ்டம் மாறத் தொடங்கியது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற உதவுவதற்காக - திருச்சியின் மாணவர்கள் நடத்தும்வசதியால் இந்த திட்டம் அந்த மாணவருக்கு கிடைத்தது. என்ஐடி மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் ஜேஇஇ தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்களுக்கு தனியாக தகுதித் தேர்வு வைத்து 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு என்ஐடி மாணவர்களின் கற்பித்தல் மையம் மூலம் வார விடுமுறை நாட்களில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. கூரை ஓடுகள் உள்ள வீட்டில் தனது பெற்றோர், இரண்டு சகோதரிகள் மற்றும் தாத்தா பாட்டிகளுடன் வசிக்கும் அருண் குமார் பல்வேறு கவனச்சிதறல்கள் மற்றும் நிதி சிக்கல்களுக்கு மத்தியில் ஜேஇஇ மெயின் தேர்வில் 98.24 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.தந்தை ஆர்வம்அருண் ஆரம்பத்தில் தனது அடிப்படை மொபைல் ஃபோனைப் பயன்படுத்தி நெட்வொர்க் பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நீடித்த அழைப்புகள் மூலம் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டார். பின்னர், அவரது தந்தை பொன்னழகன் தனது மகனுக்கு ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக ஸ்மார்ட்போன் வாங்க ரூ.10,000 கொடுத்தார். அரசாங்கத்தால் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிக்கு ஆடியோ சிக்கல்கள் இருந்தன.நினைக்கவில்லைகாஞ்சிபுரத்தில் உள்ள உணவத்தில் உதவியாளர் வேலைகளைச் செய்த அருணின் தந்தை தனது மகன் சரியான பள்ளி கல்வி பெற வேண்டும் என்று விரும்பினார். இது தொடர்பாக அவர் கூறும் போது, "ஆறு வருஷத்துக்கு முன்னாடி, தனியார் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடியாததால, அவனை அரசுப் பள்ளியில் சேர்த்தேன். அவர் ஒரு பிரகாசமான மாணவர் என்பதால் அவரை வேலைக்குத் தள்ளுவது பற்றி நான் ஒருபோதும் நினைத்ததில்லை, " என்று பிரபல ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் தெரிவித்தார்.ஜேஇஇ தேர்வுஒருங்கிணைப்பாளர் எஸ் ரோஹித் கூறுகையில், கடந்த ஆண்டுக்கான இட ஒதுக்கீட்டின்படி அருண் ஐஐடி ஒன்றில் இடம் பெறுவார் என்றார். அருணின் பள்ளி தலைமையாசிரியர் அமுதா பாரதி கூறுகையில், மாநிலத்தில் வேறு எந்த அரசு பள்ளி மாணவரும்தேர்ச்சி பெறவில்லை என்றார்.கொரோனாஅருண்குமார் கூறும் போது, 2019 ஆம் ஆண்டு வரை ஐஐடிகள் இருப்பதைப் பற்றி எனக்குத் தெரியாது . தரமான பயிற்சி மற்றும் பயிற்சியளித்தவர்கள், மிக முக்கியமாக என் குடும்பம் மற்றும் என் பள்ளி என் மீது வைத்திருந்த நம்பிக்கை இந்த சாதனையை அடைய எனக்கு உதவியது. எங்கள் சிரமங்கள் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகள் இருந்த போது, படிப்பில் கவனத்தை சிதறவிடல்லை என்றார்.செமஸ்டர் கட்டணம்இதனிடையே அருணினின் குடும்பம் ஐஐடியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவது பற்றி கவலையில் இருந்தார்கள். ஏனெனில் அவர்களின் மாத வருமானம் சில ஆயிரங்கள் கூட இல்லை. அடுத்த சில நாட்களில் ஐஐடி சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கும் நிலையில், ஐஐடியில் சேரும் அரசுப் பள்ளி மாணவனின் கனவை நிறைவேற்ற ஸ்காலர்ஷிப் மற்றும் உதவியை அருணின் குடும்பத்தினர் எதிர்பார்த்தார்கள். இதுகுறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாது.கல்வி செலவுஇதுகுறித்து அறிந்த முதல்வர் ஸ்டாலின், மாணவனை நேரில் அழைத்து பாராட்டியதுடன், கல்வி செலவை அரசே ஏற்கும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு பள்ளியில் பயின்று ஐஐடி நுழைவு தேர்வில் வென்ற அருண்குமார் என்ற மாணவனின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அரசு ஏற்கும்திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம், கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னழகன், பூவாத்தாள் தம்பதியரின் மகன் அருண்குமார், செவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர். இவர் இந்த ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள இந்திய தொழிலநுட்பக் கழகத்தில் ( ஐஐடி-ஹைதராபாத்) பொறியியல் படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவர் அருண்குமாரை, முதலமைச்சர் அவர்கள் இன்று (28.20.2021) நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்தினார். எளிய பின்புலத்திலிருந்து வந்து, அரசுப் பள்ளியில் படித்து இச்சாதனையை நிகழ்த்திய மாணவரைப் பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மேற்படிப்பிற்கான கல்விச் செலவ முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment