உலக சிக்கன நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த வேண்டும் - ஆசிரியர் மலர்

Latest

 




 


28/10/2021

உலக சிக்கன நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த வேண்டும்

 



 " உலக சிக்கன நாள் விழா " , ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் " உலக சிக்கன நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுமாறு அரசு , பார்வையில் காணும் அரசாணையின் வாயிலாக அறிவுறுத்தியுள்ளது.


2. ஒவ்வொரு ஆண்டும் உலக சிக்கன நாளை முன்னிட்டு பள்ளி மாணவ / மாணவியர்களிடையே சிக்கனம் மற்றும் சேமிக்கும் பண்பிணை வளர்த்திடும் பொருட்டு , அதன் ஒரு நிகழ்வாக,

( 1 ) கட்டுரைப்போட்டி 

( 2 ) நாடகப்போட்டி 

( 3 ) நடனப்போட்டி 

( 4 ) பேச்சுப்போட்டி 


போன்ற கலை நிகழ்ச்சிகள் மாவட்ட அளவில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள் 


3. இந்த நிதி ஆண்டான 2021-2022ல் கொரோனா நோய் கிருமி தொற்றின் காரணமாக மாணவர்களின் நலன் கருதியும் சமுக இடைவெளியை பேணிக்காத்திடும் வண்ணம் , பள்ளி மாணவர்களிடையே நாடகம் மற்றும் நடனப் போட்டிகளுக்கு பதிலாக உலக சிக்கன நாளை முன்னிட்டு கீழ்கண்ட போட்டிகளை ஆன்லைன் முலமாகவோ அல்லது சமுக இடைவெளியுடனோவோ நடத்தலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. உலக சிக்கன நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்துதல் சார்ந்து சிறுசேமிப்பு ஆணையரின் கடிதம் - இணைப்பு: அரசாணை!


DSE - World Savings Days Competition regards.pdf - Download here....

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459