தமிழகத்தில் பால்வளத்துறையில் பணியிட மாறுதல், புதிய பணி நியமனங்களுக்கு பணம் தந்து ஏமாற வேண்டாம் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவுறுத்தியுள்ளார்.
அரசு வேலை:
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வருடம் முதல் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏராளமானோர் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். அனைவருக்கும் அரசு பணியில் சேர வேண்டும் என்பது பெரும் கனவாக இருந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் அரசு வேலை பெற போட்டித்தேர்வு எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் சிலர் சிபாரிசுகள் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்கள் பணம் கையாடல் செய்கின்றனர்.
இதனை நம்பி ஏராளமானோர் அரசு வேலை கிடைக்கும் என்ற ஆசையில் பணத்தை லட்சக்கணக்கில் கொடுத்து ஏமாறுகின்றனர். தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அலுவலகங்கள் திறக்கப்பட்டாலும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவால் மீண்டும் வேலை கிடைப்பது என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில பண மோசடி செய்யும் கும்பல் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான புகார்களும் காவல்துறைக்கு வந்த வண்ணம் உள்ளது.
சமீபத்தில் அரசு பள்ளிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் கேட்கும் நபர்களிடம் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தினார். அவரை தொடர்ந்து தற்போது பால்வளத்துறை அமைச்சர் நாசர் பால்வளத்துறையில் பணியிட மாறுதல், புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்
No comments:
Post a Comment