இல்லம் தேடி கல்வி' திட்டத்திற்கு.. சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம்.. தமிழக அரசு உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


30/10/2021

இல்லம் தேடி கல்வி' திட்டத்திற்கு.. சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம்.. தமிழக அரசு உத்தரவு

 


சென்னை: இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்குச் சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மொத்தம் 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த 1.5 ஆண்டுகளாகவே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.கொரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைனில் கல்வி கற்க முடியாத ஏழை மாணவர்களுக்குப் பலன் அளிக்கும் இப்படியொரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இல்லம் தேடி கல்விமுதல்கட்டமாகக் காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்பட 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. "இல்லம் தேடி கல்வி" பணியில் ஈடுபட உள்ள தன்னார்வலர்கள், தினமும் ஒன்று முதல் ஒன்ற மணிநேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் எனப் புதுமையான முறையில் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க உள்ளனர்.தமிழ்நாடு அரசு உத்தரவுஇதற்காகப் பட்டப்படிப்பு நிறைவு செய்த தன்னார்வலர்கள் ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக தி.க தலைவர் கி வீரமணி, கல்வித் திட்டம் நமது பிள்ளைகள் வருங்கால வளர்ச்சித் திட்டம் என்பதால், இதில் அவசரக் கோலம்; அள்ளித் தெளித்த நிலை தவிர்க்கப்படுதல் அவசியம் என்றும் இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆர்.எஸ்.எஸ். கொள்கையைப் பரப்பும் திட்டம் என்று விமர்சித்துள்ளார்.முதல்வர் விளக்கம்இந்த விகாரம் சர்ச்சையான நிலையில், இந்த திட்டத்திற்கான தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும் முறையும், அவர்களது பங்களிப்பும் கல்வியாளர் குழுவால் கண்காணிக்கப்படும் என்றும் அரசின் வழிகாட்டுதலை முறையாகக் கடைப்பிடிப்போர் மட்டுமே தன்னார்வலர்களாகத் தொடர அனுமதிக்கப்படுவர் என்றும் முதல்வர் விளக்கம் அளித்திருந்தார். மேலும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்போவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.சிறப்பு அதிகாரி நியமனம்இந்தச் சூழலில், இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்குச் சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மொத்தம் 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வணிகவரித்துறை இணைய ஆணையராக ஆனந்த் மோகன், வணிகவரித்துறை (புலனாய்வு 1) இணை ஆணையராக மெர்சி ரம்யா நியமிக்கப்பட்டுள்ளனர்.ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்அதேபோல தமிழ்நாடு இ சேவை மையத்தின் இணை இயக்குநராக பாலச்சந்தரும் சிப்காட் எனப்படும் தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக நிஷாந்த் கிருஷ்ணாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உதகை துணை ஆட்சியர் டாக்டர். மோனிகா ராணா, ஐஏஎஸ், உதகை மலைகள் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் திட்ட இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி துணை ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, ஐஏஎஸ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநராக (உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கித் திட்டம்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.,..

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459