ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்று முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசுக்கு கோரிக்கை:
தமிழக அரசு அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தது. குறிப்பாக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பல் தொடர்பான பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 833 தொடக்கப்பள்ளிகள், 98 நடுநிலை, 108 உயர்நிலை, 98 மேல்நிலைப் பள்ளிகள், 1,324 விடுதிகள் உள்ளது. இங்கு மொத்தம் 5,200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
ஆனால் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை கண்காணிக்க மூன்று துறை சார்ந்த அலுவலர்கள் மட்டுமே உள்ளனர். அவற்றில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தமிழ்நாடு அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் முதுகலை பட்டதாரி ஆசிரியர் முன்னேற்றச் சங்க கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்டத்திற்கு ஒரு கல்வி அலுவலர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் உண்டாக வேண்டும்.
மண்டல கல்வி இயக்குனர், 12 மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள், 112 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடப்பிரிவை தொடங்க வேண்டும். மாணவர் விடுதிகளில் பயோமெட்ரிக் கருவிகள் பொருத்த வேண்டும். பள்ளி மற்றும் விடுதிகளுக்கு என்று தனித்தனி பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஆண்டுதோறும் பள்ளிகள் தரம் உயர்த்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment