தனது மாணவர்களை ஆன்லைன் மூலம் பார்த்துவிட்டு ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரளா மாநிலம், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசிரியை மாதவி (46). இவர் அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.கொரோனா சூழலால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியை மாதவி ஆன்லைனில் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.இருமல்அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு இருமலும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. பொதுவாக ஆன்லைன் கிளாஸில் மாணவர்கள் வீடியோவை ஆன் செய்துவிட்டு அட்டன்ட் செய்தால் நெட்வொர்க் பிரச்சினை ஏற்படும் என்பதால் பெரும்பாலும் அவர்களை வீடியோவை ஆஃப் செய்ய சொல்லிவிட்டுத்தான் வகுப்பெடுப்பார்கள்.அடுத்த வகுப்புஅது போல்தான் மாதவியும் வகுப்பெடுத்தார். உடனே வீடியோவை ஆன் செய்யுங்கள், நான் உங்களை பார்க்க வேண்டும் என கூறினார். மாணவர்களும் ஆன் செய்தனர். அதில் சில மாணவர்களிடம் பேசியுள்ளார். பின்னர் வீட்டுப் பாடம் கொடுத்த மாதவி தனக்கு உடல் நிலை சரியில்லாததால் அடுத்த வகுப்பில் பார்க்கலாம் என கூறிவிட்டார்.மயக்கம்அவரது உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது மாதவி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆன்லைன் வகுப்புகளை ரெக்கார்டு செய்து அதை கிளாஸுக்கு வராத மாணவர்கள் போட்டு பார்த்து தெரிந்து கொள்வர்.சோகம்ஆனால் மாதவி ரெக்கார்டு செய்த ஆன்லைன் வகுப்பு அவரது உறவினர்களுக்கும் மாணவர்களுக்கு சோக நினைவுகளாக மாறிவிட்டது. அவர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக இறந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆன்லைன் வகுப்பை எடுத்துக் கொண்டிருந்த போது தான் இறந்துவிடுவோம் என தெரிந்தவுடன் மாணவர்களை ஒரு முறை பார்க்க விரும்பிய ஆசிரியையின் பாசத்தையும் நேசத்தையும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் நெகிழ்ச்சியுடன் நினைத்து பார்க்கிறார்கள்