மாண்புமிகு அமைச்சர் சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அவர்களின் அறிவிப்பு அங்கன்வாடி மையங்களில் முன்பருவக்கல்வி பயில வருகைபுரியும் குழந்தைகளுக்கு இரண்டு இணை வண்ண சீருடைகள் வழங்கும் திட்டத்தை எஞ்சிய மாவட்டங்களான கோயம்புத்தூர், கன்னியாகுமரி, கரூர், நீலகிரி, சிவகங்கை, தூத்துக்குடி, மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்துதல்,
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் "சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை" என்ற பெயரினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை என்று பெயர் மாற்றம் செய்ததுடன், குழந்தைகள், மகளிர், மூத்தக்குடிமக்கள். திருநங்கைகள் ஆகியோரது நலனில் தனி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கு இணங்க சமூக மற்றும் மகளிர் உரிமைத் துறையின் 2021-2022 ஆம் நலன் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையை (மான்ய கோரிக்கை எண்.45) தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த போது மாண்புமிகு அமைச்சர் சமூக நலன் மகளிர் உரிமைத் துறை அவர்கள், ஏனையவற்றுக்கிடையே. *குழந்தைகள் மையங்களில் முன்பருவக்கல்வி பயில வருகைபுரியும் 2 வயது முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு இணை வண்ண சீருடைகள் வழங்கும் திட்டம் எஞ்சிய மாவட்டங்களான கோயம்புத்தூர், கன்னியாகுமரி, கரூர், நீலகிரி, சிவகங்கை, தூத்துக்குடி, மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 4 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படும்" என்று அறிவிப்பு வெளியிடப்பட்டார்கள்.
No comments:
Post a Comment