தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/10/2021

தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு


சென்னை: தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வருகிற 31-ம் தேதி அன்று முடிவடைய உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நவம்பர் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார், என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம் என்று மருத்துவ நிபுணர் குழுவினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.இந்த குழுவினர் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் தற்போது நவம்பர் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா குறைந்துள்ளதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- * திரையரங்குகளில் நவம்பர் 1-ம் தேதி முதல் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது * அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்களுக்கான இரவு 11 மணி வரை செயல்பட வேண்டும் என்ற நேரக்கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது* தமிழகத்தில் தனித்து இயங்கும் அனைத்து வகை மதுக்கூடங்களுக்கும்(பார்கள்) இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது * விளையாட்டு அரங்குகளில் விளையாட்டு, பயிற்சி போட்டிகள் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது * அனைத்து பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த 1-ம் தேதி முதல் அனுமதி* அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி நடத்த அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது* கேரளா தவிர பிற மாநிலங்களுக்கு 100% இருக்கையுடன் சாதாரண, குளிர்சாதன பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459