பிஎப்.புக்கு 8.5% வட்டி வழங்க ஒப்புதல். - ஆசிரியர் மலர்

Latest

 




 


30/10/2021

பிஎப்.புக்கு 8.5% வட்டி வழங்க ஒப்புதல்.

 பிஎப் சந்தாதாரர்களுக்கு, அவர்களின் கணக்கில் உள்ள தொகைக்கு ஆண்டுதோறும் வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. 2018-19 நிதியாண்டில் பிஎப் வட்டி 8.65 சதவீதமாக இருந்தது. ஆனால், ஒன்றிய பாஜ அரசு, இந்த வட்டியை 2019-20 நிதியாண்டில் 8.5 சதவீதமாக குறைத்து விட்டது. இது தொழிலாளர்களிடையே மிக கடுமையான அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கும், மாற்றமின்றி இதே வட்டியை வழங்க கடந்த மார்ச் மாதம் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இது தொழிலாளர்களின் கணக்கில் எப்போது வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், நடப்பு நிதியாண்டில் ஊழியர்களின் பிஎப் கணக்கில் உள்ள இருப்பு தொகைக்கு 8.5 சதவீத வட்டி கணக்கிட்டு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது 5 கோடிக்கும் மேற்பட்ட பிஎப் சந்தாதாரர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என, நிதியமைச்சக அதிகாரிகள் கூறினர்.


ஆசிரியர் மலர்

LESSON PLAN. (பாடத்திட்டம்)

1

வகுப்பு 1

CLICK HERE

2

வகுப்பு 2

CLICK HERE

3

வகுப்பு 3

CLICK HERE

4

வகுப்பு 4

CLICK HERE

  5

வகுப்பு 5

CLICK HERE

6

வகுப்பு 6

CLICK HERE

7

வகுப்பு 7

CLICK HERE

8

வகுப்பு 8

CLICK HERE

9

வகுப்பு 9

CLICK HERE

10

வகுப்பு 10

CLICK HERE



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459