மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 63ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/10/2021

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 63ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

 மதுரை மாநகராட்சி பள்ளிகளில் தேவைப்படுகின்ற LKG / UKG வகுப்புகளுக்கான முற்றிலும் தற்காலிகமாக 6 மாதங்களுக்கு மட்டும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இப்பணிகளில் சேருவோர் எக்காலத்திலும் எக்காரணம் கொண்டும் பணி நிரந்தரம் கோர இயலாது.

மொத்தப் பணியிடங்கள் : 63 

கல்வித் தகுதி :  குறைந்த பட்சம் பனிரெண்டாம் வகுப்பு ( +2 ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் , மாண்டிசோரி பயிற்சி பெற்றிருக்க வேண்டும் முன் அனுபவம் கருத்தில் கொள்ளப்படும். தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

குறைந்தபட்ச தொகுப்பூதியம் ரூ .10,000 / - ( ரூபாய் பத்தாயிரம் மட்டும் ) ( மாதம் ஒன்றிற்கு )

சுய விவரப் படிவம் , புகைப்படம் , அடையாள அட்டை நகல் , சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : ( Consolidated Pay ) :

ஆணையாளர் , 

மதுரை மாநகராட்சி , 

அறிஞர் அண்ணா மாளிகை , 

தல்லாகுளம் , 

மதுரை - 625 002


விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 27.10.2021 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459