‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2021’- முன்னிட்டு காமராஜர் போர்ட்லிமிடெட் மற்றும் ‘இந்து தமிழ் திசை’இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டியை நடத்துகின்றன. இந்தப் போட்டிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ - மாணவிகள் பங்கேற்கலாம். ‘நேர்மையே வாழ்க்கையின் வழி’ என்பதை நோக்கமாகக் கொண்டு ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2021’, அக்.26 முதல்நவ.1 வரை நாடெங்கும் கடைபிடிக்கப்படவிருக்கிறது.
இதையொட்டி, காமராஜர் போர்ட் லிமிடெட், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழோடு இணைந்து ‘சுதந்திர இந்தியா@75: நேர்மையுடன் கூடியதற்சார்பு’ எனும் கருப்பொருளில் ஊழல் எதிர்ப்பு குறித்த சமூகவிழிப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன் பள்ளி மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டியை நடத்துகின்றன.
ஜூனியர்களுக்கான ஓவியப் போட்டியில் 6 முதல் 8-ம் வகுப்புமாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். ‘ஊழல் இல்லாத இந்தியா’ எனும் தலைப்பில், 24X27 செ.மீ., அளவுள்ள வெள்ளைத்தாளில் ஓவியத்தை வரைந்து, மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், வீட்டு முகவரி, செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தாளின் பின்பக்கத்தில் எழுத வேண்டும். இதை, ‘தி சர்குலேஷன் பிரிவு, இந்து தமிழ் திசை, 124 - வாலாஜா சாலை, சென்னை – 2’ எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
சீனியர்களுக்கான கட்டுரைப் போட்டியில் 9 முதல் 12-ம் வகுப்புமாணவ - மாணவிகள் பங்கேற்கலாம் ‘புதிய இந்தியாவை உருவாக்கு – ஊழலை ஒழித்தல்’ எனும்தலைப்பில் 500 முதல் 600 வார்த்தைகளுக்குள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கட்டுரை இருக்க வேண்டும். 100 சதவீதம் மாணவர்களது சொந்தக் கருத்தாக இருக்க வேண்டும். பிறரது கருத்துகளை எடுத்து பயன்படுத்தக் கூடாது.
சுவாரசியமான மொழிநடையில் படிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டும்படியான படங்களைச் சேர்த்து, kpt.vigilweek@hindutamil.co.in எனும் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். ஓவியம் மற்றும் கட்டுரைகளை அக்டோபர் 22-ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment