கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பு குறைப்பதற்கு தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் " மக்கள் பள்ளி என்கிற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதன் தொடச்சியாக , பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் கடிதத்தின் படி , எதிர்வருகின்ற அக்டோபர் 2 , 2021 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிக் கல்வி சார்ந்து விவாதிக்கப்பட உள்ள கூட்டப்பொருளோடு , இந்த மக்கள் பள்ளித் திட்டமானது அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காக செயல்படுத்தப்பட உள்ளது என்பது சார்ந்த கூட்டப்பொருளையும் தவறாது சேர்த்து , கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு , அக்டோபர் 2 , 2021 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் அனைத்து நிலை கல்வி அலுவலர்களும் ( CEO , DEO , DIET- Principal and Facuities , BEO , ADPC , APO , HMs , EDCS , DCs and BRTES ) கிராம சபை கூட்டங்களில் கண்டிப்பாக கலந்து கொண்டு இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கான ஆலோசனைகளை வழங்கி அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களும் இத்திட்டத்தின் வாயிலாகப் பயனடைவதை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எனவே , இந்நிகழ்வினை சிறப்பு கவனத்துடன் கண்காணித்திட உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment