முடி உதிர்தலைத் தடுக்கும் எளிய டிப்ஸ் - ஆசிரியர் மலர்

Latest

 




 


29/09/2021

முடி உதிர்தலைத் தடுக்கும் எளிய டிப்ஸ்

 பெண்கள், ஆண்கள் பாகுபாடின்றி அனைவரும் இருக்கும் பிரச்னை முடி உதிர்தல். உடலுக்கு ஊட்டச்சத்துகள் தேவைப்படுவதுபோல தலைமுடிக்கும் ஊட்டச்சத்துகள் தேவை. ஊட்டச்சத்துகள் கிடைக்காதபட்சத்தில் முடி வலுவிழந்து உதிர்கிறது. 

மேலும், சுற்றுச்சூழல் மாசு, உணவு முறைகள் உள்ளிட்ட காரணிகளும் இருக்கின்றன. இதில் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ கூட முடி உதிர்தலுக்குக் காரணமாகலாம். அதாவது உங்களுடைய முடிக்கு ஒவ்வாத ஷாம்பூகளை, செயற்கை ரசாயனம் நிறைந்த ஷாம்பூகளை பயன்படுத்தினால் முடி உதிர்தல் ஏற்படலாம். 

மேலும் உங்கள் தலைப்பின்னலை அவ்வப்போது கொஞ்சம் மாற்றியமைக்கலாம். ஒரேமாதிரி தலைப்பின்னல் இருக்கும்போது ஒரே முடியில் சூரியக்கதிர்கள் அதிகமாக விழும்போது முடி உடைந்துபோகும். 

பொடுகுப் பிரச்னை இருந்தால், முதலாவதாக அதனை சரிசெய்ய முயற்சி  செய்ய வேண்டும். 

முடி உதிர்தலைக் குறைக்கவும், பொடுகுப் பிரச்னையை சரிசெய்யவும் ஓர் எளிய வழி: சிறிது தேங்காய் எண்ணெயுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து இந்த கலவையை உங்கள் முடியின் வேர்க்கால்களில் தேய்த்து மசாஜ் செய்யவும். சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீர் கொண்டு தலைமுடியை அலசவும். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459