சென்னை: தமிழ்நாடு பொது சேவையில் சேர்க்கப்பட்டுள்ள வழக்குத் துறையில் 50 உதவி அரசு வழக்குரைஞர், கிரேடு- II பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மொத்தம் 50 காலியிடங்கள் உள்ளன.24.09.2021க்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கம்போது ஆதார் எண்ணுடன் இணைத்து ஒரு முறை பதிவினை கட்டாயம் விண்ணப்பதாரர்கள் மேற்கொள்ள வேண்டும். ஒருமுறை டிஎன்பிஎஸ்சி இணையத்தில் பதிவு செய்தால் ஐந்து வருடங்கள் டிஎன்பிஎஸ்சி தளத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள்
வேலை அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
வேலை நிறவனம் : தமிழ்நாடு பொது சேவை வழக்குத் துறை
வேலையின் பெயர் : Assistant Public Prosecutor
மொத்த பணியிடங்கள் : 50
கல்வி தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சட்டத்துறையில் பிஎல் பட்டம் பெற்று பார்கவுன்சிலில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும். தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 56,100 - ரூ.1,75,500 வழங்கப்படும்.
வயது வரம்பு : 34 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேர்வு செய்யப்படும் முறை : முதல்நிலை, முதன்மைத் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்்
விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணமாக ரூ.150, முதல்நிலைத் தேர்வுக்கு ரூ.100, முதன்மைத் தேர்வுக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். தெளிவான விவரங்கள் அறிய செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலை பாருங்கள்,.
முதல்நிலை தேர்வு
முதல்நிலைத் தேர்வு 06.11.2021 அன்று நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24.09.2021 ஆகும். மேலும் விவரங்களை அறிய www.tnpsc.gov.in இணையத்தில் பாருங்கள்
இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படும்
மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment