BRTE - நிறுத்தப்பட்ட பயணப்படி ( FTA ) தொடர்ந்து வழங்க SPD உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/08/2021

BRTE - நிறுத்தப்பட்ட பயணப்படி ( FTA ) தொடர்ந்து வழங்க SPD உத்தரவு.

 




IMG_20210810_152027

IMG_20210810_152035

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் வட்டார வள மையங்களில் பணியாற்றும் வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஏப்ரல் 2021 மற்றும் மே 2021 மாதங்களில் வழங்கப்பட்ட நிலையான பயணப்படியை ( FTA ) ஜூன் 2021 மாதத்தில் வழங்கப்பட இருக்கின்ற சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டி மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் , ஆனால் தாங்கள் ஏப்ரல் 2021 மாதத்தில் முழுமையாகவும் ஜூன் 2021 மாதத்தில் , ( 7 - ம் தேதி முதல் 30 விழுக்காடு பணியாளர்களுடன் - பொது போக்குவரத்து இல்லாத பெருந்தொற்று காலத்திலும் தங்களது சொந்த வாகனத்தில் பயணம் செய்து ) பணியாற்றியதாகவும் குறிப்பிட்டு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த நிலையான பயணப்படியை ( FTA ) தொடர்ந்து வழங்கிடவும் , மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையினை திரும்பப் பெறவும் பார்வையில் காணும் மனுவில் கோரியுள்ளனர்.


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் பணியாற்றும் வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் நிரந்தர பணியாளர்கள் அவர்கள் பள்ளி பார்வை மற்றும் அலுவலகப் பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் போது நிலையான பயணப்படி ( FTA ) விதிகளின்படி வழங்கப்படுகிறது . ( ஒரு நாள் பார்வைக்கு ரூ .60 / -ம் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 15 பார்வை இருப்பின் 15 x 60 = ரூ .900 / - எத்தனை நாட்கள் பார்வை இருந்தாலும் அதிகபட்சமாக ரூ .900 / - மாதப் பயணப்படியாக வழங்கப்படுகிறது . ஒவ்வொரு மாதமும் அவர்கள் அளிக்கும் பார்வை அறிக்கையின் ( Visit report ) அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் அடுத்த மாதத்தில் நிலையான பயணப்படி வழங்கப்படுகிறது.


கடந்த 05.06.2021 அன்று மாநில திட்ட இயக்கக நிதி பிரிவிலிருந்து மின்னஞ்சல் மூலம் நிரந்தர மற்றும் தொகுப்பூதியம் பணியாளர்களுக்கு ஏப்ரல் 2021 மற்றும் மே 2021 மாதங்களுக்கான நிலையான பயணப்படி நிறுத்தப்பட்டுள்ளது. பார்வையில் காணும் மனுவில் கோரியுள்ளவாறு ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியாற்றியதாக தெரிவிக்கும் ஏப்ரல் 2021 மற்றும் மே 2021 மாதங்களுக்கான நிலையான பயணப்படி நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கும் பட்சத்தில் , அவர்கள் பணியாற்றியிருப்பின் அதனை உறுதி செய்து வழங்கிடவும் , வரும் மாதங்களில் வழக்கம் போல ஆசிரியர் பயிற்றுநர்கள் பணியாற்றிய காலத்தில் பயணம் மேற்கொண்டு இருப்பின் அதனை உறுதி செய்து பயணப்படியை விதிகளின்படி வழங்கிட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459