பூஸ்டர் டோஸ்களின் முக்கியத்துவம் என்ன?.. டெல்டா வைரஸை பூஸ்டர் தடுக்குமா?..ஆய்வு முடிவு.. முழு விவரம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


19/08/2021

பூஸ்டர் டோஸ்களின் முக்கியத்துவம் என்ன?.. டெல்டா வைரஸை பூஸ்டர் தடுக்குமா?..ஆய்வு முடிவு.. முழு விவரம்


லண்டன்: முதல் 2 டோஸ் தடுப்பூசிகளை விட பூஸ்டர் டோஸ் டெல்டா வைரஸை முழுமையாக தடுக்கும் என்று இங்கிலாந்து ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் போட்டு வரும் கொரோனாவை ஒடுக்கும் ஒரே பேராயுதம் தடுப்பூசிதான்.வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகள் விரைவாக தடுப்பூசி செலுத்தி வருகின்றன. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.அடுத்த 9 வருடங்களில் உலக வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயரும்- ஐ.நா. பருவநிலை மாற்றத்திற்கான குழு பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிட்ஷீல்டு தடுப்பூசி மக்களுக்கு பிரதானமாக போடப்பட்டு வருகின்றன.2 டோஸ்கள்நமது நாட்டில் தடுப்பூசி மீதான பயம் காரணமாக மக்கள் முதலில் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டவில்லை. இதனால் நாடு முழுவதும் ஏராளமான தடுப்பூசிகள் வீணாகின. உலகம் முழுவதுமே தடுப்பூசி தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. முதலில் முதல் டோஸ் போட்டால் தொற்று பாதிப்பு கட்டுப்படும் என்று கூறப்பட்டது. அடுத்ததாக 2 டோஸ் போட்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்று கருதி உலக நாடுகள் விரைவாக 2-வது டோஸ் போட்டன.பூஸ்டர் டோஸ் போடும் பணிதற்போது 2 டோஸ் முடித்த பிறகு பூஸ்டர் டோஸ் போடும் பணியில் பல்வேறு நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன. அதாவது 2 டோஸ் போட்ட பிறகு போடப்படும் மூன்றாவது டோஸே பூஸ்டர் டோஸ் ஆகும். பெரும்பாலான நாடுகள் இன்னும் முதல் டோஸே போட்டு முடிக்காத நிலையில் பணக்கார நாடுகள் பூஸ்டர் டோஸ் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டது. தடுப்பூசி செலுத்த ஏழை நாடுகளுக்கு பணக்கார நாடுகள் உதவ வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியது.டெல்டா மாறுபாடுஇந்த நிலையில் முதல் 2 டோஸ் தடுப்பூசிகளை விட பூஸ்டர் டோஸ் டெல்டா வைரஸை முழுமையாக தடுக்கும் என்று இங்கிலாந்து ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் குறைவான செயல்திறன் கொண்டவை என்பதும் ஃபைசர் இன்க். மற்றும் பயோஎன்டெக் எஸ்இ யின் மெசஞ்சர் ஆர்என்ஏ தடுப்பூசி முழு தடுப்பூசி போடப்பட்ட முதல் 90 நாட்களில் செயல்திறனை இழந்தது. அதாவது தடுப்பூசி போடப்பட்ட மக்கள் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டபோது, ​​அவர்களின் உடலில்தடுப்பூசி வீரியமே இல்லாதவர்களைப் போலவே வைரஸின் அளவும் இருந்தது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.ஆய்வு முடிவுகள்அதே வேளையில் பூஸ்டர் டோஸ் டெல்டா வைரஸ்களை எதிர்த்து போராடுகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரளிவாக காட்டுகிறது. இந்த ஆய்வு முடிவுகள் பூஸ்டர் டோஸ் போடும் ஆர்வமுள்ள நாடுகளை இன்னும் அதிகமாக தூண்டியுள்ளன. . ஃபைசர்-பயோஎன்டெக் அல்லது மாடர்னா இன்க். எம்ஆர்என்ஏ தடுப்பூசியின் இரண்டு டோஸையும் பெற்ற அமெரிக்கர்கள் எட்டு மாதங்களுக்குப் பிறகு மூன்றாவது டோஸை பெற முடியும் என்று அமெரிக்கா நேற்று தெரிவித்துள்ளது.உலக நாடுகள் ஆர்வம்இதேபோல் இங்கிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்னும் பரந்த அளவில் பூஸ்டர்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். இந்த மாதம் ஃபைசர்-பயோஎன்டெக்கின் மூன்றாவது டோஸை கொடுக்கத் தொடங்கிய இஸ்ரேலில், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் 86% செயல்திறன் மிக்கவை என்று ஆரம்ப முடிவுகள் காட்டுகின்றன. ஆனாலும் டெல்டா மாறுபாடு நோய்த்தொற்றுக்கு எதிராக எந்த தடுப்பூசியும் முற்றிலும் பாதுகாக்காது என்றும் மேற்கண்ட ஆய்வில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459