மாத சம்பளம் வாங்குவோர், இஎம்ஐ கட்டுவோர் கவனத்துக்கு.. இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள மாற்றங்கள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/08/2021

மாத சம்பளம் வாங்குவோர், இஎம்ஐ கட்டுவோர் கவனத்துக்கு.. இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள மாற்றங்கள்

 சென்னை : ஏடிஎம்களில் அனுமதிக்கப்பட்ட மாதாந்திர இலவச பரிவர்த்தனையைத் தாண்டி கூடுதலாக பயன்படுத்துவதற்கான கட்டண உயர்வு இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதேபோல் விடுமுறை நாடகளில இஎம்ஐ எடுப்பதும் இந்த மாதம் முதல அமலுக்கு வருகிறது. இதேபோல் விடுமுறை நாள் என்றாலும், அன்றைய நாள் சம்பளம் வருவதும் இந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் கார்டுகளை வேறு வங்கியின் ஏடிஎம் மெஷின்களில் பயன்படுத்தும்போது பணப் பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணம் ரூ. 15 வசூலிக்கப்பட்டு வந்தது.இனி இந்த கட்டணம் 2 ரூபாய் அதிகரித்து ரூ. 17 ஆக உயருகிறது. பணமில்லாத பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணமும் ரூ. 5-இலிருந்து ரூ. 6 ஆக உயருகிறது. உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா மச்சி.. இப்டி கூடவாழ்த்து சொல்லலாம்பா!அதற்கு மேல் கட்டணம்இனி வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது ஏடிஎம் கார்டுகளை மற்ற வங்கியின் ஏடிஎம் மெஷின்களில் மாதத்துக்கு மூன்று முதல் ஐந்து முறை இலவசமாக பரிவர்த்தனை செய்துகொள்ளும் நடைமுறை தொடரும். அதேநேரம் மெட்ரோ நகரங்களில் அதிகபட்சம் மூன்று முறை இலவசமாக பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். மற்ற நகரங்களில் அதிகபட்சம் ஐந்து முறை இலவசமாக பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.வார இறுதி நாட்கள்இதனிடையே இன்று முதல் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை வார இறுதி நாட்களிலும் பெற்றுக்கொள்ளும் வசதி அமலுக்கு வருகிறது. இதுபோலவே இஎம்ஐ போன்றவையும் வார இறுதி நாட்களில் செலுத்தும் வசதியும் இம்மாதம் முதல் அமலுக்கு வருகிறது.வேலை நாட்கஅரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வேலை நாட்களில் அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. மொத்தமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கான மொத்த தொகை என்ஏசிஹெச் எனப்படும் தேசிய பணம் செலுத்தும் கார்பரேஷன் வழியாகவே வழங்கப்படும். வார இறுதி நாட்களில் விடுமுறை என்பதால் அடுத்த வேலை நாட்களில் மட்டுமே கிளியரன்ஸ் வசதி இருந்து வந்தது. இனி அனைத்து நாட்களிலும் செயல்படும் என மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.சனி ஞாயிறுஇன்று முதல் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஈ.எம்.ஐ கட்டணங்கள் போன்ற முக்கியமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இனிமேல் வார வேலை நாட்களில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இனி எல்லா நாட்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் . சம்பளம் அல்லது ஓய்வூதிய சேவைகள் கிடைக்கும்.பங்குகள் டெவிண்ட்சம்பளம் மட்டும் அல்லாமல் வங்கிக்கு செலுத்த வேண்டிய இஎம்ஐ போன்றவற்றையும் குறிப்பிட்ட அந்த நாட்களில், வார இறுதி நாட்களாக இருந்தாலும் இன்று முதல் செலுத்த முடியும். பங்குகளுக்கான டிவிடெண்ட்டையும் வார இறுதி நாள் ஞாயிறு என்றாலும் பெறலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459