மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா கல்வி உபகரணப் பொருட்களின் தரம் குறித்து மாணவர்களின் கருத்தைப் பெற்று விபரம் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/08/2021

மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா கல்வி உபகரணப் பொருட்களின் தரம் குறித்து மாணவர்களின் கருத்தைப் பெற்று விபரம் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 


IMG_20210814_103348

20.07.2021 அன்று நடைபெற்ற கூட்ட அறிக்கையில் , மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் , விலையில்லாக் கல்வி உபகரணப் பொருட்களின் தரம் , அளவு , வண்ணம் மற்றும் மாணவர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இருக்கிறதா என்பது குறித்து மாணவர்களின் கருத்துகளை பெற்று அனுப்புமாறு கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 ஒவ்வொரு கல்வியாண்டும் , விலையில்லாக் கல்வி உபகரணப் பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டவுடன் , 4 அல்லது 5 நாட்களுக்குள் மாணவர்களிடம் விலையில்லா கல்வி உபகரணப் பொருட்களின் பயன்பாடு குறித்து கருத்துகள் பெறப்பட வேண்டும்.


2. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் தனித்தனியாக அறிக்கை பெறப்பட வேண்டும்.


3 . விலையில்லாக் கல்வி உபகரணப்பொருட்கள் பெறப்பட்டவுடன் , பொருட்கள் தேவைப்பட்டியலின் அடிப்படையில் பெறப்பட்டுள்ளதா மற்றும் அவற்றின் தரம்சரியான முறையில் உள்ளனவா உரிய அலுவலர் மூலம் Randomly சரிபார்த்து , அதன் விவரத்தினை உடனடியாக அனுப்பப்படவேண்டும்.


 எனவே , மேற்காண் பொருள் சார்ந்து , மாவட்டத்தில் உள்ள மாவட்டக்க ல்வி அலுவலர் தலைமையாசிரியர்கள் வாயிலாககருத்துகள் கோரப்பட்டு , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து , கல்வி மாவட்டம் வாரியான தொகுப்பறிக்கையை , 13.08.2021 க்குள் சென்னை -6 , தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்கழகத்திற்கு அனுப்ப ஏதுவாக ( இரண்டுநகல்கள் ) விரைவு அஞ்சலில் அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

DSE - Cost free Thing Proceeding - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459