அரசுப் பள்ளிகளில்‌ தொழிற்கல்விப்‌ பாடம் சீரமைப்பு: பாரம்பரிய, தற்காப்புக்‌ கலைகள்‌ அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/08/2021

அரசுப் பள்ளிகளில்‌ தொழிற்கல்விப்‌ பாடம் சீரமைப்பு: பாரம்பரிய, தற்காப்புக்‌ கலைகள்‌ அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

 


.com/

அரசுப் பள்ளிகளில்‌ தொழிற்கல்விப்‌ பாடத்திட்டம் சீரமைக்கப்படும் என்றும் பாரம்பரிய, தற்காப்புக்‌ கலைகள்‌ அறிமுகம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக.26) உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை  மீதான விவாதம் நடைபெற்றது.


இதில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியான அறிவிப்பு:

''தொழிற்கல்விப்‌ பாடத்திட்டத்தைச்‌ சீரமைத்தல்‌

தொழிற்கல்வி பயிலும்‌ மாணவர்களின்‌ வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்‌ வகையில்‌ அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ தொழிற்கல்விப்‌ பாடங்கள்‌ தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகத்தின்‌ உறுதுணையோடு மேம்படுத்தப்படும்‌.

இதனால்‌ மாணவர்கள்‌ தொழிற்சாலைகளின்‌ தேவைகளுக்கேற்ப திறனைப் பெற்று உடனடி வேலைவாய்ப்பினைப்‌ பெறுவர்‌.

பள்ளிகளில்‌ பாரம்பரியக்‌ கலைகள்‌

கரகாட்டம், கும்மி, சிலம்பாட்டம்‌, ஒயிலாட்டம்‌, காவடியாட்டம்‌, பன்னிசை, நாட்டுப்புறப்‌ பாட்டு போன்ற தமிழரின்‌ பாரம்பரியக்‌ கலை வடிவங்களை அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களிடம்‌ எடுத்துச்‌ செல்வதை‌ இலக்காகக்‌ கொண்டு கிராமப்புறங்களில்‌ ஆலோசனை மையம்‌ உருவாக்கப்படும்‌. நாட்டுப்புறக்‌ கலைஞர்களின்‌ உதவியுடன்‌ பயிற்சியளிக்கப்படும்‌.

இதுபோலவே சிலம்பம்‌, மல்யுத்தம்‌ முதலான தமிழரின்‌ பாரம்பரிய தற்காப்புக்‌ கலைகளையும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்களுக்கு முறையாகக்‌ சேர்க்க உரிய பயிற்சி அளிக்கப்படும்‌''.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459