பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு நிகழ் கல்வியாண் டில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு பள்ளிக்கல் வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது :
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநில , மாவட்ட திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் குறுவள மையங்க ளில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி மாறுதல் வழங்க அரசு உத்தரவிடுகிறது. நிகழ் கல்வியாண்டில் பணி மூப்பு அடிப்படையில் 500 ஆசி ரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறு தல் செய்திட வேண்டும். மேலும் , தற்போது தேர்வு செய்யப் படும் பணியில் மூத்த ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி மாறுத லுக்கு விருப்பமின்மை தெரிவித்து , பணியில் தொடர விரும் பினாலும் அதனை அனுமதிக்கத் தேவையில்லை . 2014 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களில் சேர்ந்த 500 பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் . ஒவ் வொரு ஆண்டும் பணிமாறுதல் செய்யப்படும் போதும் , பணி இடங்களுக்குபாடவாரியாகதிறமையும் அனுபவமும் சேவை மனப்பான்மையும் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்த நடவ டிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வு , ஆசிரியர்க ளுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர் நடத் தப்பட வேண்டும் . கலந்தாய்வு அனைத்தும் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் மட்டுமே நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment