மாணவர்களுக்கான தேசிய அளவிலான அறிவியல் திறனாய்வுத் தேர்வு - மாதந்தோறும் உதவித்தொகை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது? - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/08/2021

மாணவர்களுக்கான தேசிய அளவிலான அறிவியல் திறனாய்வுத் தேர்வு - மாதந்தோறும் உதவித்தொகை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது?

 


.com/img/a/

* வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் -2021 இணைய வழியில் அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு -2021

 * வெற்றி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ஒரு வருடத்திற்கு உதவித்தொகை 

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் , விபா நிறுவனம் , என்.சி.இ.ஆர் , டி { NCERT , GOVT.OF INDIA ) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை , மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் கொரோனா பேரிடரால் பள்ளிகள் திறக்காமல் இருப்பதால் வீட்டில் இருந்தே இத்தேர்வை மாணாவர்கள் எழுத திட்டமிடப்பட்டுள்ளது. இத்தேர்வு இந்தியா முழுவதும் 30-11-2021 ( செவ்வாய் மற்றும் 05-12-2021 ( ஞாயிறு ) ஆகிய இரு நாட்கள் இணையவழியில் நடைபெற உள்ளது. ஸ்மார்ட் போன் , டேப்லெட் , மடிக்கணினி , கணினி மூலம் தேர்வு நடைபெற உள்ளது . இந்த திறந்த புத்தகத்தேர்வினை ஆங்கிலம் தவிர தமிழ் , இந்தி , மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் மாணவர்கள் தேர்வு எழுத இயலும் முக்கியமாக தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு தேசிய அளவிலான தேர்வு வரை அனைத்தும் தமிழிலேயே தேர்வு நடைபெறும். 


தேர்வின் முக்கியமான நோக்கங்கள் : 


* அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறையில் பள்ளி மாணாக்கர்களின் பங்கேற்பை அதிகரித்தல் " மிகப்பெரிய அறிவியல் ஆய்வில் பங்கேற்கலாம். இதில் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் நம் உணவுப் பழக்கம் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் தாக்கம் போன்றவற்றை அறியலாம். 


தேர்வுக் கட்டணம் + 100 ரூபாய் 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-10-2021 

தேர்வு நடைபெறும் நாள் : 30-11-2021 ( செவ்வாய் ) அல்லது 05-12-2021 ( ஞாயிறு ) 

தேர்வு நேரம் : 90 நிமிடங்கள் ( 1.30 மணி நேரம் ) நேரம் : காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை எப்போது வேண்டுமானாலும் எழுதலாம். ( ஒரு மாணவர் ஒரு முறை மட்டுமே எழுத முடியும் )


யாரெல்லாம் தேர்வு எழுதலாம் ? 

 6 ம் வகுப்பு முதல் 11 ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இத்தேர்வு எழுதலாம். 6 முதல் 8 வரை ஒரு பிரிவாகவும் 9 முதல் 11 வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடைபெறும். 


தேர்விற்கான பாடத்திட்டம் : 

பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் பாடப்புத்தகத்தில் இருந்து 50 சதவீத வினாக்களும் , அறிவியல் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு ஆச்சர்யா பிரபுல்லா சந்திர ராய் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் இந்தியாவின் சுதந்திர போராட்டம் மற்றும் அறிவியல் ஆகிய புத்தகங்களில் இருந்து 40 சதவீத கேள்விகளும் , சிந்தித்து விடையளித்தல் என்ற தலைப்பில் 10 சதவீத கேள்விகளும் ஆக மொத்தம் 100 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.


எவ்வாறு பதிவு செய்வது ? 


www.wm.org.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 

பள்ளி வழியாக : பள்ளி மூலமாக விண்ணப்பிக்க இயலும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.பள்ளி மூலமாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பள்ளி அளவிலான சான்றிதழ் வழங்கப்படும்.


தனித்தேர்வர்களாக : 

தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் இணையதளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.


பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் : 

பள்ளி அளவில் : பள்ளியில் ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 10 மாணாக்கர்கள் பங்கேற்றால் வகுப்பிற்கு 3 மாணாக்கர்களுக்கு பள்ளி அளவிலான மின் சான்றிதழ்கள் வழங்கப்படும் , 


மாவட்ட அளவில் : மாவட்ட அளவில் ( 6 முதல் 11 ம் வகுப்புவரை ஒவ்வொரு வகுப்பிற்கும் 3 பேர் வீதம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் . 

> அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் . - , மாவட்ட மண்டல அளவில் அருகில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.


மாநில அளவில் : மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவர் . அத்தேர்வு செயல்முறை வடிவில் அமைந்து இருக்கும் . 

- இதில் தேர்வு செய்யப்படும் 120 மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்கள் , கேடயங்கள் வழங்கப்படும்.

- 120 மாணாக்கர்களில் வகுப்பிற்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசாக முறையே ரூ .5000 , ரூ .3000 , ரூ .2000 வழங்கப்படும்.

தேசிய அளவில் : 

- ஒவ்வொரு வகுப்பிலும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை ) முதல் 2 இடங்களை பெறும் மாணாக்கர்கள் தோவு செய்யப்பட்டு தேசிய அளவிலான முகாமிற்கு அழைக்கப்படுவார்கள்.

- தேசிய அளவில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு முதல் தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மாதந்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

 - மேலும் ஸ்ரீஜன் என்ற பெயரில் தேசிய மற்றும் மண்டல அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் ஒன்று முதல் 3 வாரங்களுக்கு பயிற்சி பெறும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

- தேசிய அளவிலான முகாமில் நடைபெறும் பல்வேறு வகையான அறிவியல் சார் நிகழ்வுகளில் பங்கேற்பர் . அதில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் , கேடயங்கள் மற்றும் முதல் இரண்டாம் , மூன்றாம் இடம் பெறும் மாணாக்கர்களுக்கு முறையே ரூ .25000 , ரூ .15000 , ரூ .10000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் . 

> மண்டல அளவிலும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக செய்த மாணாக்கர்களுக்கு ரூ .5000 , ரூ .3000 , ரூ , 2000 என ரொக்கப்பரிசு வழங்கப்படும் . - அனைத்து மாணாக்கர்களும் ஒவ்வொரு விஞ்ஞானி அல்லது ஆராய்ச்சியாளருடன் இணைக்கப்பட்டு அவர்கள் படிக்க , கருத்துக்களை தெரிந்து கொள்ள வழிகாட்டப்படுவார்கள் , இதுபோன்ற தோவுகளால் மாணவர்களின் திறமைகள் கண்டறியப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வாய்ப்பாக அமையும் . மேலும் இந்த வருடம் பதிவு செய்யும் மாணாக்கர்கள் அனைவரும் இந்திய அளவிலான மிகப்பெரிய அறிவியல் ஆய்வில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது.


 மேலும் விவரங்களுக்கு .. 

கண்ணபிரான் , 

மாநில ஒருங்கிணைப்பாளர் , 

வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் , 

cell : 8778201926 

Email : vvmtamilnadu@gmail.com

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459