இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 4ம் தேதி, தரவரிசை பட்டியல் வெளியாக உள்ளது.
தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே, 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்தப்பட உள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூலை 26ல் துவங்கி இம்மாதம் 24ல் முடிந்தது. கடந்த 27ம் தேதியுடன் விண்ணப்ப கட்டணம் செலுத்தும் அவகாசம் முடிந்தது. அதேநேரம், ஆன்லைனில் கட்டணம் செலுத்தியவர்கள், அசல் சான்றிதழ்களை 'ஸ்கேன்' செய்து, இணையதளத்தில் பதிவேற்றி வருகின்றனர்.இந்த சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து, அரசு தேர்வு துறை வழியாக, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
விளையாட்டுப் பிரிவில் ஒதுக்கீடு கேட்டவர்களுக்கு மட்டும், சென்னையில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லுாரியில் நேரடியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.'இதில் மாணவர்கள் யாராவது பங்கேற்காமல் இருந்தால், நாளையும், நாளை மறுநாளும் நேரடியாக, தரமணி மத்திய பாலிடெக்னிக் கவுன்சிலிங் உதவி மையத்துக்கு சென்றால், அங்கு சான்றிதழ்களை ஆய்வு செய்து கொள்ளலாம்.'கூடுதல் விபரங்களை, https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், வரும் 4ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்' என, உயர் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment