இனி EMIS மூலம்தான் தரவுகள் பெறப்படும் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள். - ஆசிரியர் மலர்

Latest

 




04/07/2021

இனி EMIS மூலம்தான் தரவுகள் பெறப்படும் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

 கடிதங்களில் பள்ளிக் கல்வித் துறை சார்பான தரவுகள் ( அனைத்து வகை பள்ளி மேலாண்மை , மாணாக்கர்கள் ஆசிரியர்கள் / அலுவலர்கள் எண்ணிக்கை மற்றும் நலத்திட்டத்தில் கல்வியியல் உபகரணங்கள் முதலியன ) கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை ( EMIS ) மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உடனுக்குடன் புதுப்பிக்கப்பட ( Current Undation ) வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . அதனடிப்படையில் , இனிவரும் காலங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் மேற்குறிப்பிட்ட விவரங்கள் நேரடியாக கோரப்படுவதை கைவிட்டு கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை மூலம் மட்டுமே தரவுகள் பெற்று பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே , பள்ளிக் கல்வி ஆணையர் அலுவலகம் சார்பாக தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழகத்திற்கு 2021-2022 ஆம் கல்வியாண்டு 1 முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான இரண்டாம் பருவம் பாடப்புத்தகம் சார்பாக குறிப்பிட்ட மாதிரி படிவத்தின் படி தரவுகள் பெற்று தர கேட்டுக்கொள்கிறேன்.

IMG_20210704_183613

IMG_20210704_183626

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459