மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "செப்டம்பர் 12- ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெறும். நாளை (13/07/2021) மாலை 05.00 மணி முதல் nta.ac.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வு விண்ணப்பத்தைப் பதிவிறக்கி விண்ணப்பிக்கலாம். கரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155- லிருந்து 198- ஆக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இருந்த 3,862 தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் இந்த முறை அதிகரிக்கப்படும். கரோனா விதிகளின் அடிப்படையில் தேர்வர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment