கடலுார் ஆசிரியர் இல்லம் அமைக்கப்பட உள்ள இடத்தில் ஆக்கிரமிப்பை மீட்டு தர கோரி தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக் கல்வி அமைச்சரிடம் மனு அளித்துள்ளனர்.
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில தலைவர் தீனதாயளன், மாநில பொதுச்செயலாளர் ஜான்வெஸ்சி, மாநில பொருளாளர் ருக்மாங்கதன், பூந்தமல்லி ஒன்றிய செயலர் ஆனந்த், திருவள்ளுர் மாவட்ட துணைத் தலைவர் வேதநாயகம் ஆகியோர் பள்ளி கல்வி அமைச்சர் மகேஷிடம் அளித்த மனு:
காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு மற்றும் கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும். கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். ஆசிரியர்களின் உயர் கல்வி தகுதிக்கு பின்னேற்பு வழங்க உத்தரவிட வேண்டும்.ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட ஆசிரியர்களின் சார்பாக 20.06.1972ல் கடலுார் சுப்புராயலு நகரில் 1 ஏக்கர் 20 சென்ட் இடம் ஆசிரியர் இல்லம் அமைக்க முடிவு செய்து வாங்கப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெயரில் பதிந்த அந்த இடம் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனை மீட்டெடுத்து வங்கியில் டிபாசிட் செய்துள்ள தொகை மூலம் கடலுார் ஆசிரியர் இல்லம் ஏற்படுத்தி தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment