கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்.. . தமிழ்நாட்டுக்கும் ஆபத்தா? அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி? - ஆசிரியர் மலர்

Latest

 




09/07/2021

கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்.. . தமிழ்நாட்டுக்கும் ஆபத்தா? அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?

  


சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் பெருமளவு குறைந்து விட்டது.ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளாவில் இன்னும் கொரோனா குறையவில்லை. அங்கு தினமும் சாராரியாக 12,000 பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. வார இறுதி நாட்களில் கடுமையான ஊரடங்கு போட்ட போதிலும் தொற்று குறைந்தபாடில்லை.ஜிகா வைரஸ்இது போதாதென்று தற்போது முதல்முறையாக 'ஜிகா' வைரஸ் பாதிப்பும் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. பாறசாலை என்ற இடத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவருக்கு 'ஜிகா' வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் தாயார் உள்ளிட்ட 13 பேரின் மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.ஜிகா வைரஸ் என்றால் என்ன?இதனால் ஜிகா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஜிகா வைரஸ் என்பது மழைக்காலங்களில் பரவும் ஒருவகை காய்ச்ச்சல் போன்றதுதான். இந்த வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் கொசுக்கள்தான். டெங்கு, சிக்கன்குனியா ஆகிய நோய்களை பரப்பக்கூடிய கொசுக்கள் ஜிகா வைரசையும் பரப்புகின்றன.அறிகுறிகள் என்ன?பொதுவாக ஈரப்பதம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஜிகா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜிகா வைரஸ் கொசுக்கள் மூலமாகவே பரவும் என்பதால் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது மிக அவசியமாகும். சுடுநீர் குடிப்பது மிகவும் நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும். சாதாரண காய்ச்சலுக்கு உள்ளதை போன்றே, தலைவலி‌, முதுகுவலி, உடல் சோர்வு, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.விழிப்புணர்வு வேண்டும்கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தால் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஜிகா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை. ஆனால் தமிழ்நாடு எல்லை பகுதியை ஒட்டி கேரளாவில் ஜிகா புகுந்து விட்டதால் தமிழ்நாடும் முன்எச்சரிகையாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். இப்போதே ஜிகா வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்..

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459