🌿 சீத்தாப் பழத்தின் விதைகளை உலர வைத்து, பின் அதை தூளாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தூளை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர வேண்டும். எண்ணெய்ச் சிக்கை போக்க அரப்புத் தூளைத் தேய்த்து வந்தால் தலை முடி சுத்தமாகும். பேனும் ஒழிந்து விடும்.
🌿 ஒரு பங்கு அரப்புத்தூளுடன், 1 பங்கு சீகைக்காய் தூளை தண்ணீரில் கலந்து தலையில் எண்ணெய் வைத்தோ, வைக்காமலோ, தலைக்குத் தேய்த்துக் குளித்தால், கூந்தல் மென்மையாகும்.
🌿 சோப்புக்கு பதிலாக அரப்புத்தூள் தேய்த்து குளித்தால் உடம்பில் உள்ள அழுக்குகளை நீக்குவதுடன் அரிப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
🌿 அரப்புத்தூளுடன், கஞ்சியைக் கலந்து தலைக்குத் தடவி, பத்து நிமிடம் ஊறவைத்து தலைக்குக் குளிக்கலாம். இது இயற்கை ஷாம்பு ஆகும்.
No comments:
Post a Comment