புதுச்சேரியில்.. நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது.. அரசு திடீர் அறிவிப்பு.. ஏன்.. என்னாச்சு? - ஆசிரியர் மலர்

Latest

 




15/07/2021

புதுச்சேரியில்.. நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது.. அரசு திடீர் அறிவிப்பு.. ஏன்.. என்னாச்சு?

 


புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடியே இருக்கின்றன.தமிழ்நாட்டில் வருகிற 1-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து நாளை ஆலோசனை நடக்கிறது.டிஎன்பிஎஸ்சி-க்கு 4 புதிய உறுப்பினர்கள் நியமனம்.. 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் என அறிவிப்பு நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் பள்ளிகளில் 9, 10, 11,12-ம் வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.திடீர் அறிவிப்புஇதனால் மாணவர்களின் வருகைக்காக சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று பள்ளிகள் தயாராக இருந்தன. இந்த நிலையில் புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறக்கப்படாது என்று மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இன்று திடீரென அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆலோசனை நடத்தினோம்பள்ளி-கல்லூரி திறப்பது குறித்து தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக குறையவில்லை. எனவே பள்ளிகள் திறப்பை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வந்தது. இந்த கோரிக்கை தொடர்பாக முதல்வர் ரங்கசாமி சார்பில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் ஆலோசனை நடத்தினோம்.பள்ளிகள் திறக்கப்படாதுஇந்த ஆலோசனையில் பள்ளி திறப்பை ஒத்திவைப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற விவரம் பின்னர் வெளியிடப்படும். இப்போதைக்கு பள்ளி- கல்லூரி திறப்பு இல்லை. தேதியோ, மாதமோ குறிப்பிட இயலாது என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.அனைத்து கல்லூரிகளும் ஆன்லைன் வழியே தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.பல்வேறு விமர்சனங்கள்புதுவை அரசின் இந்த திடீர் அறிவிப்பால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. கொரோனா காரணமாக பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பது நல்ல முடிவுதான். ஆனால் முதலிலேயே இது தொடர்பாக ஆலோசனை நடத்தி, ஒரு தெளிவான முடிவு எடுத்து இருக்கலாம் என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.: 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459