கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக மாணவி கல்வி கற்பதை குடியிருப்புக்கே நேரடியாக சென்று பார்வையிட்டு உற்சாகமூட்டி ஊக்கப்படுத்திய இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் ப.சண்முகநாதன்
இலுப்பூர்,ஜூலை.1:
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று கல்வி கற்க முடியாத சூழலில் அரசுப்பள்ளிகளின் மாணவர்கள் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக கற்றலை மேற்கொண்டு வருகின்றார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அவர்களின் உத்தரவிற்கிணங்க மாவட்டக்கல்வி அலுவலர்களின் அறிவுரைகளை பின்பற்றி தலைமையாசிரியர்கள்,வட்டாரக்கல்வி அலுவலர்களின் வழிகாட்டலோடு சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்களின் கண்காணிப்பின்கீழ் கல்வித்தொலைக்காட்சியில் தங்களது வகுப்பு பாடத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பாடம் கற்பிற்கப்படுவதை பார்த்து தங்களுக்கு ஏற்படும் பாட சந்தேகங்களை வகுப்பு ஆசிரியர்களை அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.
இவ்வாறாக இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் கல்வித்தொலைக்காட்சி வகுப்பு நடைபெறும்போது மாணவர்கள் கற்றல் மேற்கொள்வதை மாணவர்களின் குடியிருப்புக்கே சென்று மாவட்டக்கல்விஅலுவலர் ப.சண்முகநாதன் நேரடியாக சென்று மாணவர்களை உற்சாகமூட்டி ஊக்கப்படுத்தி வருகிறார்.
அந்த முறையில் இலுப்பூர் அண்ணாநகரைச் சேர்ந்த செல்வக்குமார்- சுந்தரி தம்பதியின் மகளான இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் படிக்கும் லத்திகாசரண் என்பாரின் குடியிருப்புக்கு இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் ப.சண்முகநாதன் வியாழக்கிழமை நேரடியாகக் சென்றார். பின்னர் கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 10 -ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் வரலாறு அலகு 2ல் இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் என்ற பாடத்தினை மாணவி பார்த்து கற்றல் மேற்கொண்டதை பார்வையிட்டு மாணவியை உற்சாக மூட்டி ஊக்கப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி, பள்ளியின் தலைமையாசிரியை ஆர்.தமிழ்செல்வி ,ஆசிரியைகள், பெற்றோர் கலந்துகொண்டனர்.
கல்வித்தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்க ஏற்பாடு செய்த தமிழக முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், கல்வித்துறை அலுவலர்களுக்கும், தமிழக அரசுக்கும், மாணவியும், பெற்றோரும் நன்றி தெரிவித்தனர்..
No comments:
Post a Comment