02.08.2021 முதல் ஆசிரியர்களுக்கு நடைபெறவிருந்த அடிப்படை பயிற்சி ஒத்திவைப்பு -ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


30/07/2021

02.08.2021 முதல் ஆசிரியர்களுக்கு நடைபெறவிருந்த அடிப்படை பயிற்சி ஒத்திவைப்பு -ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு.

 

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் , EMIS , Hi - Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி 2.8.21 முதல் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இப்பயிற்சிக்கான திருத்தி அமைக்கப்பட்ட கால அட்டவணை பின்னர் மாவட்டங்களுக்கு தெரிவிக்கப்படும்.

பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகளுக்கேற்ப அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் , EMIS , Hi - Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு அதற்கான கால அட்டவணை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கேற்ப தற்பொழுது கருத்தாளர்களுக்கான பயிற்சி 26.7.21 முதல் 30.7.21 வரை 447 நபர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது , மேற்காண் செயல்முறைகளில் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெறும் அனைத்து நாள்களிலும் உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தின் பொறுப்பு ஆசிரியர் ஆய்வகத்தில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எனவே இப்பயிற்சி செவ்வனே நடைபெற தெரிவு செய்யப்பட்டுள்ள 6029 உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தின் பொறுப்பு ஆசிரியர்களுக்கும் கருத்தாளர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்பொழுது கருத்தாளர் பயிற்சியில் பங்கேற்றுள்ள 447 நபர்களுக்கும் பயிற்சியினை மேம்படுத்தும் நோக்கில் மீண்டும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 447 நபர்களின் பெயர் பட்டியல் இணைப்பு 1 ல் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே 6029 உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தின் பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் 447 கருத்தாளர்களுக்கும் 2.8.21 6.8.21 வரை இணையவழியாக கீழ்கண்டவாறு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

IMG_20210730_182444

IMG_20210730_182452

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459