TNVAS தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில்.. அட்டகாசமான வேலை வாய்ப்பு . மிஸ் பண்ணாதீங்க - ஆசிரியர் மலர்

Latest

 




30/06/2021

TNVAS தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில்.. அட்டகாசமான வேலை வாய்ப்பு . மிஸ் பண்ணாதீங்க


சென்னை: தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.எனப்படும் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்  பணியிடங்களை நிரப்ப அந்த பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.முந்தைய ஆண்டுகளில் நிரப்பப்படாமல் இருந்த மூன்று பணியிடங்கள் உட்பட மொத்தம் 49 இடங்களுக்குத் தகுதியான ஆட்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.மொத்த காலியிடங்கள் - 49 காலி இடங்கள் 

 கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தது முதுகலை படித்து இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தேவையான அனைத்து ஆவணங்களை இணைத்துப் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பத்தைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Official Notification: click here

 விண்ணப்பக் கட்டணம் - பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் ரூ.500. இதர பிரிவினர்களுக்கு ரூ.1000.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி - இந்த விண்ணப்பங்கள் 26 ஜூலை 2021 மாலை 5.00 மணிக்குள் வந்து சேர வேண்டும். அனைத்து தகவலும் உள்ள விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும் என்றும் தகுதியுள்ள நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இது குறித்துக் கூடுதல் விவரங்களை இணையதளத்தில் இல் தெரிந்து கொள்ளலாம்..

Application link: CLICK HERE

இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459