ஆசிரியர் நியமனம் : மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




24/06/2021

ஆசிரியர் நியமனம் : மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.

 


மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர் பணி நியமனம் இருக்க வேண்டும் , என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆசிரியர் நியமன கோரிக்கை நிராகரிப்பு நெல்லை ஐகிரவுண்டு பகு தியில் உள்ள ஒருமேல்நிலைப் பள்ளி தாளாளர் முகமது நாசர் , மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி யிருந்ததாவது :


எங்கள் பள்ளியில் 706 மாணவர்கள் படிக்கின்றனர். 18 ஆசிரியர்கள் , 2 ஆசிரியர் கள் அல்லாத பணியாளர்கள் உள்ளனர். கடந்த 2019 - ம் ஆண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7 முதல் 10 - ம் வகுப்புகளில் தமிழ் வழிப்பிரி வுக்கு இணையாக ஆங்கில வழிப்பிரிவு தொடங்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்தது. அதன்படி எங்கள் பள்ளியில் ஆங்கில வழி பாடப்பிரிவு தொடங்கப்பட்டது.


 ஆங்கில வழிப்பிரிவுக்கு ஆசிரியர்கள் நியமிக்கவும் , எங் கள் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் உபரியாக இருப்பதாக அறிவித்ததைரத்து செய் யும்படியும் பள்ளியில் உள்ள மாணவர்கள் எண்ணிக் கைக்கு ஏற்ப கூடுதலாக 3 பட்டதாரி ஆசிரியர்கள் நிய மிக்க அனுமதி கேட்டும் பட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தோம். அவர் எங்கள் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்வ துடன் , ஆங்கில வழிப்பிரி வுக்கு உரிய ஆசிரியர்களையும் , கூடுதலாக 3 பட்டதாரி ஆசிரியர்களையும் நியமிக்க அனுமதி வழங்குமாறு உத்தர விட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமனம் இந்த மனு நீதிபதிகள் சிவ ஞானம் , ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் , ஒவ்வொரு பள்ளிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 


30 மாண வர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர் கள் பணி நியமனம் இருக்க வேண்டும். ஆசிரியர் நியம னம் தொடர்பாக மனு அளிக் கும் போது , அந்த மாவட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர் கள் பற்றாக்குறை மற்றும் உபரி ஆசிரியர் எண்ணிக் கையை சமன் செய்த பிறகு , புதிய ஆசிரியர் நியமனத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஏற்கனவே கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது . அதன்படி மனுதாரர் தனது கோரிக்கையை வலியுறுத்தி அனுப்பிய மனுவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நிராகரித்தது செல்லாது. ஏற்க னவே கோர்ட்டு உத்தரவின் படி , மாணவர்கள் எண்ணிக் கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர் பாக கல்வித்துறை அதிகாரி கள் பரிசீலிக்க வேண்டும் . 


இவ்வாறு நீதிபதிகள் உத்தர வில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459