பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரின் இணை செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

 




22/06/2021

பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரின் இணை செயல்முறைகள்

 

IMG_20210622_101902

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்டு பள்ளிகள் செயல்படத் தொடங்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்து வருகின்றது. கொரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக கடந்த 2020-21ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டதால் , கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகள் நடைபெற்றது. கல்வி முறையை மேம்படுத்துவதற்காக பள்ளி மாணாக்கர் பயன்பெறும் வகையில் இணைப்பு பாடப்பயிற்சி கட்டகம் ( Bridge Course ) மற்றும் பயிற்சி புத்தகம் ( Work Book ) பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு அவற்றின் பாடப்பொருள்கள் காணொலி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் கால அட்டவணை குறித்த தகவல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டு இருந்தது. தற்போது , தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக , முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டு உள்ளது. இத்தகைய சூழலில் பள்ளியில் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு கற்றல் வாய்ப்புகள் தடையில்லாமல் கிடைப்பதற்காக கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் வகுப்புவாரியாகவும் பாடவாரியாகவும் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.


இந்த கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பப்படும் கல்வி நிகழ்ச்சிகள் யாவற்றையும் தொடர்புடைய வகுப்பில் பயிலும் அனைத்து பள்ளி மாணாக்கர் கண்டு பயன்பெறத்தக்க வகையில் உரிய நடவடிக்கைகள் எடுத்திடவும் , பின்வரும் அறிவுரைகளை அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிடவும் , அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரின் இணை செயல்முறைகள் - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459