டெல்டா வகை வைரஸ்க்கு எதிராக, கொரோனா தடுப்பூசிகள் பெரியளவில் பலன் அளிக்கவில்லை -உலக சுகாதார நிறுவனம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/06/2021

டெல்டா வகை வைரஸ்க்கு எதிராக, கொரோனா தடுப்பூசிகள் பெரியளவில் பலன் அளிக்கவில்லை -உலக சுகாதார நிறுவனம்

 


டெல்டா வகை வைரஸ்க்கு எதிராக, கொரோனா தடுப்பூசிகள் பெரியளவில் பலனளிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா முதல் அலையை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனாவால், இரண்டாவது அலையில் ஏராளமான நாடுகள் சிக்கித் தவித்து வருகின்றன.இது தொடர்பாக பேசிய உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ஒருவர், டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக, தடுப்பூசிகளின் செயல்பாடுகள் மிகவும் திறன்வாய்ந்ததாக அமையவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அடுத்தடுத்து ஏற்படும் உருமாறிய வகை வைரஸ்களால், தடுப்பூசிகள் முழுமையாக பலனளிக்காமல் போகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், மகாராஷ்டிராவில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் அறிவித்துள்ளார். இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. தற்போது இரண்டாவது அலை பரவல் கணிசமாக குறையத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.அந்தவகையில் மகாராஷ்டிராவில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார். ரத்னகிரியில் 9, ஜல்கானில் 7, மும்பையில் 2, பால்கர், தானே மற்றும் சிந்துதுர்க் ஆகிய பகுதிகளில் தலா ஒன்று என மொத்தம் 21 பேருக்கு டெல்டா பிளஸ் வகை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது என்றார்.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.95 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 17,95,34,405 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 16,41,62,300 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38 லட்சத்து 88 ஆயிரத்து 355 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,14,83,750 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 82,638 ரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459