பக்கத்தில் நடந்து போனாலே சிக்கல்தான்\".. டெல்டா+ கொரோனா இவ்வளவு ஆபத்தானதா?.. எய்ம்ஸ் வார்னிங் - ஆசிரியர் மலர்

Latest

 




23/06/2021

பக்கத்தில் நடந்து போனாலே சிக்கல்தான்\".. டெல்டா+ கொரோனா இவ்வளவு ஆபத்தானதா?.. எய்ம்ஸ் வார்னிங்

 


டெல்லி: புதிய டெல்டா + வகை கொரோனா வேகமாக பரவ கூடியது, இது மிக வேகமாக பரவும் திறன் கொண்டதாக இருப்பதால் பலர் பாதிக்கப்படலாம் என்று எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குளேரியா பேட்டி அளித்துள்ளார்.  இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வரும் டெல்டா வகை கொரோனா தற்போது டெல்டா + வகை கொரோனாவாக உருமாற்றம் அடைந்து அச்சறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.. டெல்டா வகை கொரோனாவான .1.617.2 உருமாற்றம் அடைந்து .1.617.2.1 ஆக மாறி உள்ளது.இந்த .1.617.2.1 கொரோனாதான் டெல்டா + என்று அழைக்கப்படுகிறது. டெல்டாவை விட டெல்டா + அதிக ஆபத்து கொண்டதாக, வேகமாக பரவ கூடியதாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.40 கேஸ்கள்இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு டெல்டா + கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் டெல்டா+ கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதை கவலை அளிக்க கூடிய கொரோனா வகை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநில அரசுகளுக்கு கவனமாக இருக்கும்படி இது தொடர்பாக அறிவுறுத்தலும் பறந்துள்ளது.எப்படிஇந்த நிலையில் டெல்டா+ வகை கொரோனா குறித்து எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குளேரியா பேட்டி அளித்துள்ளார். அதில், இந்த புதிய டெல்டா + வகை கொரோனா வேகமாக பரவ கூடியது. இது மிக வேகமாக பரவும் திறன் கொண்டதாக இருப்பதால் பலர் பாதிக்கப்படலாம். ஒரு கொரோனா நோயாளிக்கு அருகில் நீங்கள் மாஸ்க் இன்றி வேகமாக நடந்து சென்றாலே உங்களுக்கு நோய் பரவலாம்.பரவும்அந்த அளவிற்கு இது வேகமாக பரவும் திறன் கொண்டது. முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும். அதோடு ஏற்கனவே கொரோனா ஆண்டிபாடி உள்ளவர்களுக்கும், இம்யூன் இருப்பவர்களுக்கும் டெல்டா + ஏற்படுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது.சிகிச்சை டெல்டா+ வகையில் பலன் அளிக்கவில்லை.எப்படிஇதன் இம்யூஸ் எஸ்கேப் திறன் காரணமாக, வேக்சின் போட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை பற்றி இந்தியாவின் ஜீனோம் ஆராய்ச்சி அமைப்பானஆராய்ச்சி செய்து வருகிறது. டெல்டா + வகை கொரோனாவிற்கு எதிராக வேக்சின் திறன் கொண்டதா இல்லையா என்று இந்த குழு ஆராய்ச்சி செய்து முடிவுகளை தெரிவிக்கும்.கட்டுப்பாடுஇதன் பரவலை கட்டுப்படுத்த மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அடுத்த 6-8 வாரங்கள் மிக முக்கியமானது. தற்போது வேக்சின் போடப்படும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. வேக்சின் போடப்படும் வேகம் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும், என்று எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குளேரியா பேட்டி அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459