ஊரடங்கு காலத்தில் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது - AICTE அறிவுறுத்தல் - ஆசிரியர் மலர்

Latest

 




07/06/2021

ஊரடங்கு காலத்தில் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது - AICTE அறிவுறுத்தல்


.com/

கொரோனா காலகட்டம் மற்றும் அது தொடர்பான ஊரடங்கு இருக்கும் நிலையில், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.


தனியார் பொறியியில் கல்லூரிகளுக்கு கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே அனுப்பிய சுற்றறிக்கையில், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தாங்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவதாக பேராசிரியர்கள் பலர் கவுன்சிலுக்கு புகார் அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக அன்றியோ, பேராசிரியர்களின் விளக்கங்களை கேட்காமலோ, அவர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என பொறியியல் கல்லூரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459