கொரோனா நோய்த்தொற்று 2-வது அலை வேகமாக பரவியதன் காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
இதை தொடர்ந்து சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பிளஸ் -2 பொதுத்தேர்வு நடத்தப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பது இன்னும் முடிவாகவில்லை.
இந்த நிலையில் இன்று நடந்த ஆலோசனைக்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
அனைத்து தரப்பினருடமும் நாளை ஆலோசனை நடத்திய பிறகு பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முடிவு தெரிவிக்கப்படும்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முதமைச்சர் முக ஸ்டாலின் இறுதி முடிவு எடுப்பார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து சட்டமன்ற கட்சி தலைவர்களிடம் நாளை ஆலோசனை நடத்த முதமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவர்கள், மனநல நிபுணர்களுடனும் ஆலோசனை நடைபெற உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment