11ஆம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தக் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தேர்வு ரத்து.
2021-2022 ஆம் கல்வியாண்டில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து பார்வை 2 ல் உள்ள கடிதத்தின் வாயிலாக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன. அவ்வழிகாட்டு நெறிமுறைகளில் பத்தி 4 ல் பின்வரும் மாற்றம் செய்யப்பட்டு கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
1 . பார்வை 1 ல் கண்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் , தனியார் சுயநிதிப்பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2. தற்போது அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைப்பிரிவுகளில் ஏற்கெனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு , மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் நிலையில் அவர்களது விருப்பத்திற்கேற்றபடி பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் . அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில்
3 . கோவிட் -19 பெரும்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்த்திடலாம்.
4 . மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்த பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ , அச்சூழ்நிலையில் அதற்கென விண்ணப்பித்த மாணவர்களின் 9 ஆம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களின் விருப்பத்தின்படி பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் . மேலும் , பார்வை 2 ல் கண்டுள்ள சுற்றறிக்கையில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளவாறு 10 ஆம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில் தேர்வு எதுவும் நடத்தத்தேவையில்லை .
5. பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஜுன் 3 வது வாரத்திலிருந்து அப்போது கோவிட் பெருந்தொற்று குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளைத் துவங்கலாம் . மேற்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளின் அடிப்படையில் , பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையினை நடத்திட அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் , 2021-2022 ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி , உயர்தொழில்நுட்ப ஆய் கம் மற்றும் தொலைத்தொடர்பு முறைகளில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment