ஆசிரியர்கள் எழுத வேண்டிய துறைத் தேர்வுகள் குறித்த முதலமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட பதில் - பதில் வழங்கிய அலுவலர் - தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர்!
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் TNPSC நடத்தும் துறைத்தேர்வுகள் எழுதுகின்றனர்.ஆனால் முதுகலை ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் எத்தனை தேர்வுகள் எழுத வேண்டும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் எத்தனை தேர்வுகள் எழுத வேண்டும் தேர்வுகளின் குறியீடுகள் என்ன ? என்பதை முதலமைச்சர் தனிப்பிரிவின் கீழ் அரசாணை மற்றும் செயல்முறைகள் கடித நகல்களை தெரிந்து கொள்ள பணிவுடன் வேண்டுகிறேன் . பள்ளி வேலை நாட்களில் துறைத் தேர்வு நடக்கும் போது ஆசிரியர்களுக்கு எவ்வகை விடுப்பு அனுமதிக்கப்படுகிறது என்பதையும் அல்லது துறைத் தேர்விற்கு on duty செல்ல அனுமதி உண்டா ? என்பதை முதலமைச்சர் தனிப்பிரிவின் கீழ் மேற்காணும் தகவல்களை தெரிந்துக்கொள்ள பணிவுடன் வேண்டுகிறேன்.
பதில் :
மனுதாரரின் கோரிக்கையினை ஆய்வு செய்ததில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் துறைத் தேர்வுகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளித் துனை ஆய்வாளர் பணிக்கு தகுதி பெற 065 , 072 , 124 ( அ ) 152 , 172 குறியீடு தேர்வும் தலைமையாசிரியர் பணி தகுதிக்கு 124 ( அ ) 152 , 172 தேர்வும் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் 124 ( அ ) 152 , 172 தேர்வும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என மனுதாரருக்கு அறிவுறுத்தப்படுகிறது ஏற்பு : முதன்மைக்கல்வி அலுலவர் தருமபுரி . ந.க.எண் 0086/03/2021 நாள் 08.03.2021 .
No comments:
Post a Comment