தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு.. எவையெல்லாம் இயங்கும்? முழு விவரம் இதோ! - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/05/2021

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு.. எவையெல்லாம் இயங்கும்? முழு விவரம் இதோ!


 சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்தில் எவையெல்லாம் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறித்து பார்ப்போம்.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கு 24.05.2021 காலை முதல் நடைமுறைக்கு வரும்.இந்த முழு ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும். மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் திறக்க அனுமதி. பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிகை விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா காலத்தில் விடுமுறை போல ஊர்சுற்றுகின்றனர்...இனி தளர்வுகளற்ற ஊரடங்கு - ஸ்டாலின்காய்கறிகள்பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.வீட்டில் இருந்தேதலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும். தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.பார்சல்(மின்னணு சேவை) காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம். உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.ஜொமாட்டோஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும். ஏ.டி.எம். மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.இடு பொருட்கள்வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும். சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும். உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும்மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.இ பதிவுமருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம். வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று (22.05.2021) மற்றும் நாளை (23.05.2021) தனியார் மற்றும் அரசு பேருந்துகள்வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459