விரைவில் ஒ.டி.பி மூலம் மொபைல் போன் திட்டங்களை மாற்றலாம். - ஆசிரியர் மலர்

Latest

 




26/05/2021

விரைவில் ஒ.டி.பி மூலம் மொபைல் போன் திட்டங்களை மாற்றலாம்.

  


புதுடில்லி : மொபைல்போன் சந்தா தாரர்கள், பிரீபெய்டு திட்டத்திலிருந்து போஸ்ட்பெய்டு திட்டத்துக்கு மாறுவது என்பது நடைமுறையில் சற்று கஷ்டமான ஒன்றாகவே உள்ளது.

அதேபோல் போஸ்ட்பெய்டு திட்டத்திலிருந்து பிரீபெய்டு திட்டத்துக்கும் அவ்வளவு சுலபமாக மாறிவிட முடியாது. விண்ணப்பிப்பதில் துவங்கி, சிம் கார்டை மாற்றுவது உட்பட பல நடைமுறை கஷ்டங்கள் உள்ளன.ஆலோசனைஇத்தகைய சிக்கல்கள் எதுவும் இன்றி, ஓ.டி.பி., எனும் ஒரு முறை கடவு சொல் அல்லது எண்ணை மட்டுமே பயன்படுத்தி, எளிதாக மாறிக் கொள்ளும் வாய்ப்பு விரைவில் வரவுள்ளது.செல்லுலார் ஆப்பரேட்டர்கள் சங்கம், இத்தகைய ஆலோசனையை தொலைதொடர்பு துறைக்கு வழங்கி இருக்கிறது. இதையடுத்து, தொலைதொடர்பு துறையும் இத்திட்டத்தை செயல்படுத்துவது சம்பந்தமான ஆதாரங்களை, செல்லுலார் ஆப்பரேட்டர்களிடம் கேட்டுள்ளது.

செல்லுலார் ஆப்பரேட்டர்களின் ஆலோசனையை தொலைத்தொடர்பு துறை ஏற்கும் பட்சத்தில், திட்ட மாறுதல் என்பது எளிதான தாகிவிடும்.எளிய முறைரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், கடந்த மாதம், 9ம் தேதியன்று, வாடிக்கையாளர்கள் புதிய கே.ஒய்.சி., நடைமுறைகள் இன்றி எளிதாக, ஓ.டி.பி., வாயிலாக மாறிக்கொள்ள அனுமதி கேட்டிருந்தன.கொரோனா காலத்தில், வாடிக்கையாளர்கள் நேரடியாக வரவேண்டிய தேவை இதனால் இருக்காது என்றும், அவை தெரிவித்துள்ளன. இந்த புதிய நடைமுறையை பின்பற்றும் பட்சத்தில், செயலி அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அடுத்த, 30 நிமிடங்களில் எளிதாக திட்டத்தை மாற்றிக் கொள்ளலாம். இந்தியாவில், தற்போது மொத்த வாடிக்கையாளர்களில், 90 சதவீதம் பேர், பிரீபெய்டு திட்டத்தில் தான் உள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459