கொரனா பரவலை கட்டுப்படுத்த மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவு.
*✅மே-6 ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்:
*✅ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்
*✅ஊரகம் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை.
*✅இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் சனி, ஞாயிறு கிழமைகளில் திறக்க அனுமதியில்லை.
*✅நண்பகல் 12 மணிவரை மட்டுமே தேநீர் கடைகள் செயல்பட அனுமதி.
*✅அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்களுடன் செயல்பட அனுமதி.
*✅மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழக்கம் போல் செயல்படலாம்.
*✅காய்கறி, பலசரக்கு, பழ கடைகள் குளிர்சாதன வசதியின்றி பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.
*✅ரயில், மெட்ரோ, தனியார் , அரசு பேருந்துகளில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பயணிகளுக்கு அனுமதி.
*✅ஐடி நிறுவனங்களில் இரவுப்பணி மேற்கொள்ள அனுமதி.
*✅உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே வழங்க அனுமதி.
*✅பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
*✅திருமண நிகழ்வுகளில் 50 பேர் பங்கேற்கலாம். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி.
*✅சமுதாயம், அரசியல், கல்வி மற்றும் பொழுதுபோக்கு, இதர விழாக்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த தடை.
*✅திறந்த வெளி மற்றும் உள் அரங்கங்களில் விழாக்கள் நடத்தவும் அனுமதி இல்லை.
*✅மளிகை மற்றும் காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க அனுமதி இல்லை.
*✅நோய் பரவலை கட்டுப்படுத்த மாஸ் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளையும் அனைவரும் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
No comments:
Post a Comment