கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பி வருவதால், சில இடங்களில் நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கூடுதலாக படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் : நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் முழுவதுமாக நிரம்பியதால், சிகிச்சைக்காக வரும் கொரோனா நோயாளிகள் திருச்சி மற்றும் சேலத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
இதனிடையே நாமக்கல்லில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் 50 படுக்கைகளுடன் தற்காலிக சிகிச்சை மையம் அமைக்கப்பட்ட நிலையில், போதிய மருத்துவர்கள் இல்லாததால் பூட்டப்பட்டது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட 200 படுக்கைகளும் நிரம்பியதால் சிகிச்சைக்காக புதிதாக வரும் நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கின்றனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்திரா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 54 படுக்கைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அங்கு திங்கட்கிழமை முதல் நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் என மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.-Polimer News
No comments:
Post a Comment