ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான அரசு பள்ளி மாணவர்களில், 10 பேருக்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராக நியமித்து, ஆன்லைன் வகுப்பு நடத்த உத்தரவிடப் பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ளதால், முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பள்ளிகள், கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனா தீவிரம் குறைந்த பின், பிளஸ் 2 தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா என, முடிவு செய்ய திட்டமிடப் பட்டு உள்ளது. இந்நிலையில், ஆல் பாஸ் செய்யப்பட்ட மாணவர்களுக்கு தினசரி கற்றல் பயிற்சி வழங்க, ஆசிரியர்களை பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் அறிவுறுத்தி உள்ளார். ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, அரசு பள்ளி மாணவர்களில், 10 பேருக்கு ஒரு ஆசிரியர் என, பொறுப்பாளராக நியமித்து, ஆன்லைனில் கற்றல் பயிற்சி வழங்க வேண்டும் என, ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
இதன்படி, தினசரி பாட பயிற்சிகள், செய்முறைகள் போன்றவற்றை வழங்கி, அவற்றை மதிப்பிட்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தவும், ஆசிரியர்கள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment