வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. எஸ்பிஐ முக்கிய அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/05/2021

வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. எஸ்பிஐ முக்கிய அறிவிப்பு


மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனது வீட்டுக் கடனுக்கான வட்டியை 6.95 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாகக் குறைத்து உள்ளது. இதனால் பாரத ஸ்டேட் வங்கியில் வீட்டு கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அவர்கள் கட்ட வேண்டிய இஎம்ஐ தொகையும், வட்டியும் கணிசமாக குறையும்.நாட்டில் கொரோனா பரவல் காரணமாக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகிறது. பல்வேறு தொழில் நிறுவனங்கள், தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின்னரே பொருளாதாரம் பழையபடி வலிமை பெறும் என்ற நிலை உள்ளது, இதனால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயமும் உள்ளது இதனால் வீட்டுக்கடன் வாங்கி வீடு கட்டியவர்கள், தனிநபர் கடன் வாங்கியவர்கள், கார், பைக் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்க கடன் வாங்கியவர்கள் அதற்கு வட்டியை கட்ட முடியாமல் தவிக்கிறார்கள்.வீட்டுக்கடன்இந்த சூழலில் நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனது வீட்டுக் கடனுக்கான வட்டியை 6.95 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாகக் குறைத்து உள்ளது. அது மட்டுமல்லாமல், வீட்டுக் கடன் வாங்கும் பெண்களுக்கு வட்டித் தொகையில் கூடுதலாக 0.05 சதவீத சலுகையும் வழங்குவதாக தெரிவித்துள்ளது.வட்டி சலுகைஅத்துடன் எஸ்பிஐயின் செல்லிடப்பேசி செயலியான யோனோ செயலியில் வீட்டுக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கும் வட்டித் தொகையில் கூடுதலாக 0.05 சதவீதம் வட்டியில் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எவ்வளவு குறைப்புவிழாக்கால சலுகையாக வீட்டுக் கடன்களுக்கான வட்டியை மார்ச் 31 வரை 6.7 சதவீதமாகக் எஸ்பிஐ வங்கி குறைத்திருந்தது. இது ஏப்ரல் 1 முதல் 6.95 ஆக மீண்டும் உயர்ந்த நிலையில், தற்போது வட்டி குறைக்கப்பட்டுள்ளது.எஸ்பிஐ தகவல்பாரத ஸ்டேட் வங்கி வட்டிக் குறைப்பு மூலம், ரூ.30 லட்சம் வரை வீட்டுக் கடன் வாங்குவோருக்கு வட்டி 6.7% ஆகவும், ரூ.30 லட்சம் முதல் 75 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கான வட்டி 6.95 சதவீதமாகவும் ரூ.75 லட்சத்துக்கு மேல் வீட்டுக் கடன் பெறுவோருக்கான வட்டி 7.05 சதவீதமாகவும் நிர்ணயித்துள்ளளது.எஸ்பிஐ வங்கி நம்பிக்கைஇதன் மூலம் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் மாதந்தோறும் செலுத்தும் தவணைத் தொகை பெரிய அளவில் குறையும். புதிதாக வீடு வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள் என்றும் பாரத ஸ்டேட் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.'! 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459