ஜூன் மாதம் நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




29/05/2021

ஜூன் மாதம் நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு.

   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் 08.06.2021 முதல் 11.06.2021 வரை நடைபெறவிருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை- II , தமிழ்நாடு போக்குவரத்து சார் நிலைப் பணிகள் 2013-2018 , பணிக்கான நேர்முகத் தேர்வு , தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது . மேற்படி பதவிக்கான நேர்முகத் தேர்வின் மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் . 

> அறிவிக்கை எண் 18/2019 , நாள் 29.05.2019 - இல் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் , 2008-2019 , 1. உதவி மின் ஆய்வாளர் 2. உதவி பொறியாளர் ( மின்சாரம் ) ( பொதுப் பணித் துறை ) மற்றும் 3. தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவிகளுக்கான கலந்தாய்வு ( Counselling ) தேதியும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் . 22.06.2021 முதல் 30.06.2021 வரை நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் , மே -2021 தள்ளி வைக்கப்படுகிறது , மேலும் முடிவுகள் வெளியிடப்படாத 14 துறைத் தேர்வுகளின் முடிவுகள் 20.07.2021 அன்று வெளியிடப்படும்.


விண்ணப்பதாரர்களின் நலன் கருதி , துறைத் தேர்வுகள் , மே - 2021 - க்கு விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 31.07.2021 என மாற்றம் செய்யப்படுகிறது , இத்தேர்வானது ஆகஸ்டு 2021 ல் நடத்தப்படும். மேற்படி தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

IMG-20210529-WA0036

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459