தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கொரோனா படுக்கை, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அறியும் வகையில், ஒருங்கிணைந்த கட்டளை மையம் துவக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின், இரண்டாவது அலையை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுகாதாரத்துறை, மற்ற துறைகளுடன் இணைந்து, சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, தேசிய நலவாழ்வு குழும அலுவலகத்தில், ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை அமைத்துள்ளது. தற்போது உள்ள, 104 சுகாதார சேவை மையத்துடன் இணைந்து, இந்த கட்டளை மையம் செயல்படும். இந்த மையமானது, 24 மணி நேரமும், அரசின் படுக்கை மேலாண்மையை இணைய வழியே கண்காணித்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காலியாக உள்ள படுக்கை வசதிகளின் நிலையை அறிந்து, அதன் வாயிலாக தேவைப்படும் பொதுமக்களுக்கு உதவும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், படுக்கைகள் தேவைப்படுவோருக்கு ஆதரவாக, ஒரு புதிய டுவிட்டர் கணக்கு, '@104GoTN' துவக்கப்பட்டுள்ளது. இந்த டுவிட்டர் கணக்கின் நோக்கம், தனிநபர்கள் நேரடியாக படுக்கைகளை கோரக்கூடிய வகையில் கையாளப்படும். இதை பரவலாக மக்களிடையே கொண்டு சேர்க்க, 'டுவிட்டர்' கணக்கில், #BedsForTN என்ற, 'ஹாஸ்டாக்' பயன்படுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இவ்வசதியை பயன்படுத்தி கொள்ளும்படி, சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது see
No comments:
Post a Comment