ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் அதற்கான வழி முறைகளையும் விவரித்துள்ளனர்.
ஆதார் – மொபைல் எண்:
இந்தியா முழுவதும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்து 1 வயது முடிந்த பிறகு ஆதார் எண்ணிற்கு பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது பால் ஆதார் எனப்படும். ஒவ்வொரு நபரும் தனது ஆதார் எண்ணை வங்கி கணக்குடனும், தொலைபேசி எண்ணுடனும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து ஆதார் கார்டில் உள்ள விவரங்களை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதன்படி ஆதாரில் உள்ள பெயர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, மாதம், வருடம் போன்றவைகள் தவறாக இருந்தாலே அல்லது புதுப்பிக்க நினைத்தாலோ புதுப்பித்து கொள்ளாலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஆதாரில் விவரங்கள் தவிர தங்கள் புகைப்படங்களையும் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.
தற்போது ஆதாரில் உள்ள மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கான வழிமுறைகளையும் கொடுத்துள்ளது. https://ask.uidai.gov.in என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும். பிறகு GET OTP பட்டனை கிளிக் செய்து OTP பெற வேண்டும். அந்த எண்ணை பதிவிட்டு ஆதார் அப்டேட் என்பதை கிளிக் செய்து மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ளலாம் மேலும் தங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்க விரும்பினால் அதை தேர்வு செய்து விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பிறகு விவரங்களை சரி பார்த்து விட்டு சேமிக்க வேண்டும். இதன் பிறகு நீங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு சென்று 50 ரூபாய் கட்டணம் செலுத்தி மாற்றிய புதிய எண்ணை ஆதாரில் பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment